டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வின் புதிய அப்டேட் என்னென்னு தெரியுமா? சற்றுமுன் வந்த புதிய தகவல்!

Do you know what is the new update of TNPSC Group 4 Exam New information just arrived-TNPSC Group 4 Exam Addition Of 2500 More Posts

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய பதவிகளுக்காக நடத்தப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தேர்வுக்கு சுமார் 7382 பணியிடங்கள் நிரப்புவதற்காக சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இந்த தேர்விற்கு தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் உள்ள சுமார் 7 ஆயிரத்து 689 மையங்களில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஜூலை மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வை சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இதற்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாததால் தேர்வெழுதிய தேர்வர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருவதால் இதற்கான தேர்வு முடிவுகள் ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், டி.என்.பி.எஸ்.சி தற்பொழுது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்தாக தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி ஏற்கனவே அறிவித்த 7,301 பணியிடகளுடன் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்ட நிலையில், மொத்தம் 9,870 காலிப்பணியிடங்கள் உள்ளது. காலி பணியிடங்களில்ன் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் ஜனவரி மாதத்தில் வெளியாகும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வின் முடிவில் அதிகப்படியான தேர்வர்கள் தேர்ச்சி பெரும் வாய்ப்பு உள்ளது.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here