ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு என்னனு தெரியுமா? புதிய தகவல்…!

0
Do you know what Pongal gift is for ration card holders New information-Ration Card Holder For Pongal Gift

தமிழக அரசு வருடந்தோறும் ரேசன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொறு குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசை வழங்கி வருகிறது. அதேபோல், கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இதில் நிறைய இடங்களில் குளறுபடி நடந்ததால் இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு பணமாக வழங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு வழங்கிய 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசில், பச்சரிசி- 1 கிலோ, வெல்லம்- 1 கிலோ, முந்திரி- 50 கிராம், திராட்சை- 50 கிராம், ஏலக்காய்- 10 கிராம், பாசி பருப்பு- 500 கிராம், ஆவின் நெய் – 100 கிராம், மஞ்சள் தூள் – 100 கிராம், மிளகாய் தூள் – 100 கிராம், மல்லி தூள் – 100 கிராம், கடுகு – 100 கிராம், சீரகம்- 100 கிராம், மிளகு – 50 கிராம், புளி- 200 கிராம், கடலைப் பருப்பு- 250 கிராம், உளுத்தம் பருப்பு- 500 கிராம், ரவை- 1, கோதுமை – 1 கிலோ, உப்பு – 500 கிராம், துணி பை ஒன்று மற்றும் கரும்பு ஆகியவை வழங்கப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடி ஏற்பட்ட காரணத்தினால் இந்த ஆண்டு ரொக்கமாக 1,000 ரூபாய் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகார்வபூர்வ அறிவிப்பு எதுவும் அரசு சார்பில் வெளியிடவில்லை.

மேலும், ரேசன் கார்டுகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதில் தகுதியற்ற பலர் அரசின் இலவச ரேஷன் வசதியை பயன்படுத்தி வருகிறனர். இதனை தடுக்க மத்திய அரசு இந்த புதிய விதிமுறையை வெளியிட்டுள்ளது. அதில், ரேசன் கார்டுதாரர்கள் அவர்களின் வெரிஃபிகேஷனை மேற்கொள்ள வேண்டும். வெரிஃபிகேஷனில் நீங்கள் தகுதியற்றவர் என கண்டறியப்பட்டால் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here