TNPSC குரூப்-1 ரிசல்ட் எப்போன்னு தெரியுமா உங்களுக்கு? சற்றுமுன் வந்த புதிய தகவல் இதுதான்..!

தமிழ்நாட்டில் அரசு பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் பல்வேறு துறைகளின் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் அந்தந்த பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள். இந்நிலையில், அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் குரூப்-1 தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

Do you know when TNPSC Group-1 Result This is the new information that came recently..! read it now

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு நடைபெற்றது. 92 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வை 1,90,957 பேர் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், இந்த தேர்வுகள் நடைபெற்று 5 மாதங்களை கடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகாமல் இருந்ததால் தேர்வு எழுதியவர்கள் கவலையடைந்தனர். இந்தச் சூழலில் குரூப் 1 தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் (ஏப்ரல்) வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் அனைவருக்கும் எங்கள் ஜாப்ஸ்தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்


RECENT POSTS IN JOBSTAMIL.IN