தேசிய திரைப்பட விருதை வெல்லப்போகும் திரைப்படம் எது எதுன்னு தெரியுமா? எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கும் ரசிகர்கள்!!

கடந்த 2021-ஆம் ஆண்டுகாண 69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன. அதன்படி, மாலை 5 மணிக்கு டெல்லியில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களுக்கு இந்திய அரசு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கவுரபடுத்தியும் வருகிறது. இதன்படி குறிப்பாக ஒவ்வொரு துறை சார்ந்த கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகளையும் அறிவிக்கிறார்.

மேலும், தமிழ் சினிமாவில் பொறுத்தவரை நடிகர் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை, தனுஷ் நடித்த கர்ணன், சூர்யா மற்றும் சமுத்திரக்கனி இயக்கிய விநோதய சித்தம், மணிகண்டன் நடித்த ஜெய் பீம், சிம்பு நடித்த மாநாடு ஆகிய திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Do you know which film will win the National Film Award Fans waiting with anticipation read it now

இந்த படங்களில் குறிப்பாக ஜெய் பீம், சார்பட்டா மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்கள் இந்த திரைவிருதை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, இந்தியில் இந்தியில் பெரிய அளவிலான போட்டிகள் இல்லை எனவும், ‘சூர்யவன்ஷி, 83’, ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே அந்த ஆண்டு வசூல் ரீதியாக ஓரளவிற்கு வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு திரையுலகில் பொறுத்தவரை ‘ புஷ்பா ‘ படம் போட்டியில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Also Read : அரிசியை தொடர்ந்து சர்க்கரையின் ஏற்றுமதிக்கும் தடையா? சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

இந்த ஆண்டு கூடுதல் விருதுகள் தமிழ் திரையுலகத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. குறிப்பாக நடிகர் சூர்யா, ஆர்யா, தனுஷ், மணிகண்டன் ஆகியோர்களுக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் இயக்குனர்களில் மாரி செல்வராஜ், ஞானவேல் ஆகியோரில் ஒருவருக்கு விருது கிடைக்கலாம். மேலும், இசையமைப்பாளர்களில் அனிருத்திற்கு விருது கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.