தற்போதிருக்கும் காலக்கட்டங்களில் மக்களுக்கான அனைத்துத் தேவைகளும் ஆன்லைன் வழியாக பெற்று கொள்ளும் வசதிகள் வந்துவிட்டன. எனவே அனைத்தும் டிஜிட்டல் முறையில் மாறி வருகின்றது. அதுமட்டுமல்லாது நாம் உண்ணும் உணவுகள் கூட ஆன்லைனில் பெறும் வசதிகள் வந்துவிட்டன. இதற்காக ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் வழியாக உணவு டெலிவரி பணியை மேற்கொள்கிறது. இவை உலகின் மிகப் பிரபலமான ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் ஆகும். இதில் Zomato நிறுவனமானது பயனர்களுக்கு ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்திருக்கின்றது. அதாவது ஆன்லைனில் உணவு பெறும் பயனாளர்களுக்கு UPI சேவை மூலமாக ஆன்லைனில் பொருட்களை வாங்க ஏற்பாடு செய்திருக்கின்றது.
மேலும் உணவு டெலிவரியின்போது UPI வசதிகளான போன்-பே, கூகுள்-பே மற்றும் பேடிஎம் ஆகியவைகளின் மூலமாக பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டு உணவைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாது இந்நிறுவனமானது பியர்-டு-பியர் பேமெண்ட்களையும் தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கியுடன் செயல்பட்டு இந்த சலுகைகளை அளித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. தொடர்ந்து தங்கள் நிறுவனத்துடைய சொந்த UPI சலுகைகளை பிளிப்கார்ட் மற்றும் ஜொமேட்டோ ஆகிய இரு நிறுவனங்களுமே உபயோகப்படுத்துகின்றன. தொடர்ந்து பிற டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளை செயல்படுத்தவும் பேமெண்ட் கேட்வே சேவைகள், இ-வாலட்கள், போன்றவைகள் மூலம் பயனர்களுக்கு டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளை அளிப்பதற்கு பயனுள்ளதாக உள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- Tamilnadu Government Jobs 2023 | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் | Unlock www.tn.gov.in Recruitment 2023 Notification | Grab Opportunities!
- 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்! Government Jobs 2023!
- Central Government Jobs 2023 | மத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் | Central Government Employment
- Employment News Tamil 2023 | இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் தமிழில் | Stay avid of the Competition with Latest News
- ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை வேணுமா? கிளெர்க் வேலை வேணுமா? தமிழ்நாடு அரசு அட்டகாசமான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது!