வளர்ந்து வரும் இந்த விஞ்ஞான உலகில் அனைத்து வேலைகளையும் சுலபமாக முடிக்கும் அளவிற்கு புதுப்புது கண்டுபிடிப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், வீட்டிற்கு தேவையான பொருட்கள் முதல் அத்தியாவசிய பொருட்களை வரை அனைத்தும் வாங்குவதற்கு அனைவரும் ஆன்லைன் முறையையே தேர்ந்தெடுக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், நாம் சாப்பிடும் உணவை கூட ஆன்லைன் ஆர்டர் செய்து சாப்பிடும் அளவிற்கு மக்கள் மாறியுள்ளனர்.
இந்நிலையில், தற்பொழுது மக்கள் அதிக அளவில் ஆன்லைனில் பொருட்கள் மற்றும் உணவுகளை ஆர்டர் செய்வதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளதாக குற்றசாட்டு வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக Swiggy, zomoto போன்ற தளங்களில் ஆர்டர் செய்யும் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கட்டுபடுத்த மத்திய அரசு ONDC (open Network for digital commerce) ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ONDC மூலம் மக்கள் குறைந்த விலையில் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்ளலாம். அனைத்து தரப்பு சிறு வணிகங்களையும் டிஜிட்டல் வர்த்தக துறைக்குள் கொண்டு வரும் முயற்சியாக மத்திய அரசின் DPIIT துறை கடந்த 2021 இல் அறிமுகம் செய்தது. இதன் மூலம் உணவு, வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருள்கள், வீட்டு அலங்காரப் பொருள்கள் என பலவற்றை நாம் இதன் மூலம் ஆர்டர் செய்துக் கொள்ள முடியும்.
ONDC மூலம் ஆர்டர் செய்வது எப்படி?
- முதலில் https://ondc.org/ என்ற இணையதளபக்கத்திற்கு செல்லவும்.
- அதில், “ஷாப் ஆன் ஓஎன்டிசி” என்ற OPTION-யை கிளிக் செய்யவும்.
- அதன்பிறகு, நீங்கள் ஆர்டர் செய்ய விரும்பும் ஆன்லைன் தளத்தை தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் ஆர்டரைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின், பணம் செலுத்த தொடரவும் என்பதை கிளிக் செய்தால் உங்களின் ஆர்டர் உறுதி செய்யப்படும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றி இனி நீங்கள் சுலபமாக ஆன்லைனின் ஆர்டர் செய்துக்கொள்ள முடியும். இனி இந்த சேவையுடன் மக்கள் குறைந்த செலவில் அதிக உணவை நீங்கள் ஆர்டர் செய்துக் கொள்ளலாம். இதில் உணவுகள் மட்டுமின்றி மற்ற பொருள்களையும் மக்கள் ONDC மூலம் ஆர்டர் செய்து, குறைந்த செலவில் ஆன்லைன் ஷாப்பிங் செய்துக்கொள்ளலாம்.