சென்னை மெட்ரோ ரயிலில் டிராவல் பண்றீங்களா? நாளைக்கு ஒரு நாள் மட்டும் இந்த ஆஃபர்…!

Today Latest News Update 2023

Today Latest News Update 2023

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்கிறீர்களா? நாளைக்கு உங்களுக்காகவே ஸ்பெஷல் ஆஃபரை அறிவித்துள்ளது. அதாவது விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையினை தனத்தை முன்னிட்டு நாளை (செப்டம்பர் 15) ஒரு நாள் மட்டும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாளை இரவு 10 மணி வரைக்கும் இந்த மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும் என மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. நெரிசல் மிகுந்த நேரங்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடத்திலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.