ஐபோன் யூஸ் பன்றீங்களா? UPI PIN போடாமலே பணம் செலுத்தலாம்! எப்படின்னு தெரியுமா?

இன்று உலகம் முழுவதிலும் ஐ போனை பயன்படுத்துகிறவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த போனில் ஒரு பக்கம் குறைகள் காணப்பட்டாலும் மற்றொரு பக்கம் பயனுள்ளதாகவும் இருக்கின்றது. அவை பயனர்களுடைய உபயோகத்தை பொறுத்து அமைந்துள்ளது. மேலும் இந்த போன்களில் எல்லாம் டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை செய்யும் வசதிகள் எல்லாம் நடைமுறையில் இருந்து வருகின்றன.

Pay without entering UPI PIN

அதுமட்டுமல்லாமல் இந்த ஐ-போனில் கடந்த வருட செப்டம்பரில் UPI Lite என்கிற அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அம்சம் யுபிஐ கட்டணத்தை ஒரு எளிமை செய்யப்பட்ட பதிப்பகாவும் இருந்தன. இதன் மூலமாக பாதுகாப்பான மற்றும் விரைவான பரிவர்த்தனைகளை ஐபோன் பயனாளர்கள் கை கொள்ள முடியும். அதாவது இந்த UPI Lite அம்சத்தின் மூலம் UPI பின்னை பதிவு செய்யாமலே ஐபோன் பயனாளர்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

இப்படி பரிவர்த்தனைகளை UPI Lite வசதியின் மூலமாக மேற்கொள்ள முடியும். இதற்கு அதிகபட்சம் ரூ.2,000 வரை கட்டாயமாக UPI வாலட்டில் சேமித்து வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது அதிகபட்சமாக ரூ.200 வரை ஒரு பரிவர்த்தனையின்போது பயன்படுத்தப்படுகிறது.

தொடர்ந்து இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதற்கு முதலில் paytm செயலியை திறந்து அதன் முகப்பு பக்கத்தில் உள்ள UPI Lite என்கிற பக்கத்தை ஐபோன் பயனாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். தொடர்ந்து அதனை உறுதிப்படுத்த உங்களது வங்கி கணக்கு விபரங்கள் அனைத்தையும் சரிபார்க்கப்பட்டிருப்பது அவசியம். அதற்குப்பின் அதிகபட்சமாக 2000 வரைக்கும் UPI Lite வாலட்டில் பணத்தை சேர்த்து அதனை செலுத்துவதற்கான UPI விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து உங்களுக்கான பண பரிவர்த்தனைகளை QR குறியீட்டினை ஸ்கேன் செய்து மேற்கொள்ளலாம்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN