டுவிட்டர் யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..! எலான் மஸ்க்கின் புதிய அறிவிப்பு!!

Do you use Twitter A good news for you New announcement from Elon Musk watch immediately

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகவும் அதிக மக்கள் பயன்படுத்தக்கூடியதாகவும் டுவிட்டர் செயலி இருந்து வருகிறது. டுவிட்டர் நிறுவனத்தை கடந்த அக்டோபர் மாதம் உலகின் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை இடம் அமெரிக்காவில் உள்ளது.

எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதிலிருந்தே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில், டுவிட்டர் நிறுவனத்திலிருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்தது மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வைத்திருக்கும் ‘ப்ளூடிக்’ வசதிக்கு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் கட்டணம் செலுத்தாத பிரபலங்களின் ‘ப்ளூடிக்’ வசதியை நீக்கியும் உள்ளார்.

இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தினார். அதில், நான் டிவிட்டரின் தலைமை பொறுப்பில் தொடரட்டுமா? வேண்டுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பலதரப்பினரும் எலான் மஸ்க்கை தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். இதுகுறித்து எலான் மஸ்க் கூறுகையில், ட்விட்டரை மேலாண்மை செய்ய தலைமைச் செயல் அதிகாரி பணிக்கு புதிதாக ஆள் எடுத்துள்ளேன். அந்தப் பெண் 6 வாரங்களில் அவருடயை பணியைத் தொடருவார் என்றும் தெரிவித்துள்ளார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN