வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்களா? உஷாரா இருங்க… 74 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ள ஒரு குறுஞ்செய்தி செயலியாக வாட்ஸ்அப் செயலி உள்ளது. இந்த செயலியானது மெட்டா எனப்படும் நிறுவனத்துக்கு சொந்தமானது. இந்நிறுவனம் அவ்வபோது தனது பயனாளர்களுக்காக பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன் காரணமாக பலரும் வாட்அப் செயலியை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தற்பொழுது வாட்ஸ் அப் நிறுவனம் அதிர்ச்சியளிக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை மட்டும் இந்தியாவில் 74 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட இந்த வாட்ஸ் அப் கணக்குகள் நிறுனத்தின் கொள்கைகளுக்கு மாறாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you use WhatsApp Be careful... 74 lakh accounts have been blocked by Meta Company! read it now and share your all friends and groups

இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறும் அனைத்து வாட்ஸ்அப் எண்கள் மற்றும் கணக்குகள் ஆகியவை வாட்ஸ்அப் புகார் மேல்முறையீட்டுக் குழு (ஜிஏசி) மூலம் கண்காணிக்கப்படும் என்றும் இதுபோன்ற வாட்ஸ்அப் எண்கள் மற்றும் கணக்குகள் மீது நிறுவனம் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும், போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களைக் கொடுக்கும் கணக்குகளை வாட்ஸ் அப் நிறுவனம் கவனித்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்களின் புகார்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தெரிவித்து கொள்ளவும் வழிவகை செய்துள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN