வாக்காளர் பட்டியலில் பேர் சேக்கணுமா? நீக்கணுமா? திருத்தணுமா? ரொம்ப ஈஸியா பண்ணிடலாம்! தமிழக அரசின் சிறப்பு முகாம்..!

0
Do you want to get your name in the voter listDelete Do you want to edit Very easy to make Tamil Nadu government special camp-Special Camp For Voter List

வருடந்தோறும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றுதல் போன்றவற்றிற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நவம்பர் 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த சிறப்பு முகாம் டிசம்பர் 8 ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு முகாமில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு அல்லது மாற்றம் செய்தல் மற்றும் புதிய ரேஷன் அட்டை, நகல் கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், இந்த சிறப்பு முகாமில் நேரடியாக இந்த படிவங்களை பூர்த்தி செய்து வேண்டிய விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ளலாம். இந்நிலையில், பணிக்குச்செல்வோர் வசதிக்காக, தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் தமிழகத்தில் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here