குற்றாலம் போக ஆசையா? இதோ அதற்கான சூப்பர் வாய்ப்பு…!உடனே பாருங்க!

0
Do you want to go to Koorala Falls Here is a super opportunity for that Check it out now-Public Allowed For Koorala falls

தென் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் குற்றால அருவி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன. அனைத்து வகையான சுற்றுலா பயணிகளையும் கவரும் ஒரு இடமாக குற்றாலம் திகழ்கின்றது. சீீசன் காலங்களில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக குற்றால அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்பொழுது வெள்ளப்பெருக்க குறைந்துள்ளதால் அருவிகளில் குளிக்க மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி குற்றாலத்தின் மெயின் அருவி மற்றும் பழைய குற்றல அருவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here