திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆசையா? இதோ அதற்கான சரியான நேரம்…! கோவில் நிர்வாகத்தின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி!

0
Do you want to visit Tirupati Seven Mountain Here is the right time for that People are happy with the announcement of the temple administration -Darshanam Tickets Are Released

ஆந்திர மாநிலத்தில் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவில் உலகத்தின் பணக்கார கோவில்களில் ஒன்றாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகை தருகிறனர்.

அந்த வகையில், மாதந்தோறும் திருப்பதி எழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்கு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த தரிசன டிக்கெட்டின் விலை ரூ.300 ஆக அறிவித்த நிலையில், இந்த டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பெற்றுகொள்ள முடியும்.

இதனை தொடர்ந்து, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் திருப்பதி எழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்கு நவம்பர் 24 ஆம் தேதி (நாளை) காலை 10 மணியளவில் தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடுவதாக கோவில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

நேற்று ஒரு நாள் மட்டும் திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு 69,587 பேர் வருகை தந்துள்ளனர். இதில், ரூ.4.35 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here