உங்க பிள்ளைகளும் ஸ்கூல் போறாங்களா? அப்ப இந்த செய்தி உங்களுக்குதான்!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட புதிய உத்தரவு..!

Do your children also go to school Then this news is for you The new order issued by the Department of School Education

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் தற்பொழுது இறுதி தேர்வு நடத்துவதற்கான நடாடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், ஏப்ரல் 28 தேதிக்குள் அனைத்து வகுப்புக்கும் இறுதி தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஒரு புதிய உத்தரவு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, “எண்ணும் எழுத்தும்” என்ற திட்டத்தின் மூலம் 1ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கவனிக்கும் திறன், எழுத்தாற்றல், பேசும் திறன், படிக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த சுருக்க மதிப்பீட்டு தேர்வுகள் (Summative Assessment Test) வருகிற ஏப்ரல் 17 முதல் 21ஆம் தேதி வரை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த தேர்வு மொத்தம் 60 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN