உங்க பிள்ளைகளும் ஸ்கூல் போறாங்களா? உதவித்தொகை தராங்களாம்..! உடனே அப்ளை பண்ணுங்க…

Do your children also go to school Will they give the scholarship Apply now full details here read it

புதுவை முப்படை ராணுவ நலத்துறை இயக்குனர் அவர்கள் ராணுவக்குடும்பங்களில் இருக்கும் குழைந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை அளிப்பதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது முப்படை ராணுவ நலத்துறையின் மூலமாக கடந்த 2022-23 கல்வி ஆண்டின்போது படித்திருந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் விதவைகளின் குழந்தைகளுக்கான பள்ளி கல்வி கட்டணத்தை அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கான விண்ணப்பப் படிவங்களானது வருகிற ஜூன் மாதம் 5-ஆம் தேதியிலிருந்து 28 வரை அளிக்கப்படவுள்ளது. இந்த விண்ணப்பங்களை முப்படை ராணுவ நலத்துறை அலுவலகத்துக்கு தங்களின் அடையாள அட்டையுடன் தகுதியுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் விதவையர்கள் ஆகியோர் பெற்றுக்கொள்ளலாம். அல்லது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திலிருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதனையடுத்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்கள் விண்ணப்பித்தினை பெறலாம். மேலும் மாஹே மற்றும் ஏனாம் பகுதியை சேர்ந்தவர்கள் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களிலும் பெற்று கொள்ள வழி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து முப்படை நலத்துறை அலுவலகத்தில் மாணவர்களின் பள்ளி கல்வி கட்டண ரசீதுடன் பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதிக்குள்ளாக சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN