அமேசான் இத பண்றாங்களா? நம்பவே முடில..! திடுக்கிடும் தகவல்…

0
Does Amazon do this Can't believe it Shocking informatio-Amazon Planned To Layoff Employees

தனியார் நிறுவனங்கள் என்றாலே வேண்டிய பொழுது பணியாளர்களை சேர்ப்பது மற்றும் நிதி பிரச்சனை, செலவுகள் உள்பட பல்வேறு காரணங்களால் அந்நிறுவனங்கள் அதிரடியாக பணியாளர்களை நீக்குவது இதுபோன்ற செயல்களை தனியார் நிறுவனங்கள் தொடர்வது வழக்கம்.

அந்த வகையில், ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் 44 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கினார். அதன்பின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ட்விட்டர் நிறுவனத்தில் மொத்தம் 7 ஆயிரம் பேர் பணியாற்றிய நிலையில் அதில் 50 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்தனர். இந்நிலையில், மீண்டும் 4 ஆயிரத்து 400 ஒப்பந்த பணியாளர்களையும் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து, பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளின் தாய் நிறுவனமான மெட்டா 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது. அந்த வகையில், பிரபல நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் ஊழியர்களையும் பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரத்தின் இறுதிக்குள் அமேசான் நிறுவனத்தில் சுமார் 10 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அமேசான் நிறுவனத்தில் சுமார் 16 லட்சம் பேர் பணிபுரிந்து வருகிறனர். இந்நிலையில், அதில் 1 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்வதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் பொருட்களின் விலை ஏற்றத்தால் நுகர்வோரின் வாங்கும் திறன் குறைந்துள்ளதாக அமேசான் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த வருவாய் இழப்பின் காரணமாகதான் பணியாளர்களை பணி நீக்கம் செய்வதாக கூறப்படுகிறது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here