தமிழகத்தில் வீட்டு பிரிவு நுகர்வோர் ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை வேறு ஒருவர் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை நீக்குவதற்காக சிறப்பு முகாம் அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் செய்து வழங்குவதற்கான சிறப்பு முகாமானது கடந்த ஜூலை 24ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இதன்படி, இந்த மின் இணைப்பு முகாம் பண்டிகை தினங்கள் மற்றும் ஞாயிற்றுகிழமைகளை தவிர அனைத்து அலுவலகங்களிலும் வேலை நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறும். இந்த முகாம் மூலம் 1.08 லட்சம் பேருக்கு தற்போது மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த முகாமை ஆகஸ்ட் 25 வரை மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 25 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.