Home Current Affairs TNPSC குரூப் தேர்வர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது! மிஸ் பண்ணாம படிங்க..!

TNPSC குரூப் தேர்வர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது! மிஸ் பண்ணாம படிங்க..!

0
Don't Miss and Read..! Official Notification for TNPSC Group Exams! Happy News Released Now

நம்ம தமிழ்நாட்டில் ரொம்ப ரொம்ப முக்கியமான எக்ஸாம் தான் டிஎன்பிஎஸ்சி. ஏனெனில், நேரடியாக தமிழக அரசு வேலையில் சேர அறிய வாய்ப்பை தருகிறது. திறமை வாய்ந்த பணியாளர்களுக்கு TNPSC திறவுகோலாக உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளை கடந்த மே மாதம் 21 ஆம் தேதி நடத்தி முடித்தது. இந்த தேர்வை சுமார் 9.94 லட்சம் பேர் எழுதினார்கள்.

இந்த முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் இருந்தனர். முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில்தான் அதற்க்கான முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். வருகிற அக்டோபர் மாதத்தில் இந்த முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்ற மிக முக்கிய அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், தமிழக அரசில் காலியாக இருக்கும் 7,138 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்று முடிந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் வருகிற டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வேலையில் சேர எங்களுடைய ஜாப்ஸ் தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்


RECENT POSTS:

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here