மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்தியாவின் 2023 – 24 ஆம் வருடத்திற்கான பட்ஜெட் தாக்கலின் போது பெண்களுக்கென்று ஒரு சிறந்த சேமிப்பு திட்டத்தை அறிவித்திருந்தார். அதாவது “மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்” எனும் திட்டத்தை பெண்களுக்கு பயனுள்ள வகையில் அறிமுகப்படுத்தினார். பெண் குழைந்தைகள் மற்றும் பெண்கள் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
இதனைத் தொடர்ந்து இதில் அதிகபட்ச முதலீடாக ரூ.2 லட்சம் வரை செலுத்தலாம். குறைந்த பட்ச முதலீடாக ரூ.1,000-மும் செலுத்தலாம். அதுவுமல்லாது இந்த சேமிப்பு திட்டத்தில் சேருவோருக்கு வட்டியாக 7.5% வரை அளிக்கப்படுகிறது. மேலும் 2 வருடங்கள் இத்திட்டத்தினுடைய முதிர்வு காலமாக உள்ளது.
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டமானது பெண்களுக்கான பாதுகாப்பான மற்றும் சிறந்த ஓர் முதலீடு திட்டமாகவும் காணப்படுகின்றது. மேலும் பெண்களுக்கு இத்திட்டம் மிகச் சிறந்த மற்றும் ஒரு பாதுகாப்புள்ள தேர்வாக அமையும். இதில் சேருவோருக்கு குறுகி காலத்திலேயே முதலீடு தொகையை எடுத்துக்கொள்கிற வசதி அளிக்கப்பட்டுள்ளது. இது மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தினுடைய மற்றொரு சிறப்பம்சமாக இருக்கிறது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை வேணுமா? கிளெர்க் வேலை வேணுமா? தமிழ்நாடு அரசு அட்டகாசமான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது!
- 10வது படித்தவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் தமிழ்நாடு அரசு வேலை வந்தாச்சு! இன்னைக்கே அப்ளை பண்ணிடுங்க!
- ஆபீஸ் அசிஸ்டன்ட், கிளெர்க், ரிசப்ஷனிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்கு தமிழக அரசில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
- பல்வேறு பணியிடங்களை வெளியிட்டுள்ளது பெல் நிறுவனம்! நேர்காணலில் மத்திய அரசு வேலை ரெடி!
- கவர்மெண்ட் வேலை பாக்குற உங்களுக்குத்தான் இந்த மகிழ்ச்சியான செய்தி! சம்பளம் அதிகமா தராங்களாம்!