மீன் வளத்துறையில்
இளநிலை பொறியாளர் பதவிக்கு சான்று சரிபார்ப்பு
டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு
சென்னை, ஆகஸ்ட் 27
மீன் வளத்துறையில் இளநிலை பொறியாளர் பதவிக்கு வரும் 5 ஆம் தேதி மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி (TNPSC) செயலாளர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) செயலாளர் பி.உமா மகேஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு எழுத்துத்தேர்வு கடந்த 18.9.2021 நடந்தது. எழுத்துத்தேர்வில் விண்ணப்பத்தாரர் பெற்ற மதிப்பெண் விவரங்கள் 15.2.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
மீன் வளத்துறையில் இளநிலை பொறியாளர் தெரிவு தொடர்பான மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை – 600 003, தேர்வாணைய சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வருகிற 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பத்தாரர்களின் மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி நேரம் மற்றும் விவரம் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை விண்ணப்பத்தாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பத்தாரருக்கு அதற்கான விவரம் எஸ்எம்எஸ்(SMS), இமெயில் மூலம் தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.
மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பத்தாரர் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர்.
எனவே, அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறதி அளிக்க இயலாது. விண்ணப்பத்தாரர்கள் மேற்படி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
RECENT POSTS:
- பிரைவேட் கம்பெனியில வேலை ரெடி! அப்ளை பண்ண நீங்க ரெடியா? தமிழகத்திலே வேலை செய்யலாம்!
- டிப்ளமோ முடிச்சிட்டு தனியார் நிறுவனத்துல வேலை தேடுறீங்களா? அப்போ இந்த வேலை உங்களுக்குத்தான்!
- ரேஷன் கார்டு வச்சிருக்க குடும்பத்துக்குத்தான் இந்த செய்தி! இத உடனே செய்யணுமாம்..!
- கோயம்புத்தூரில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை! பத்தாவது படிச்சிருந்தாலே போதுமாம்!
- தனியார் நிறுவனத்தில் வேலை தேடும் நபரா நீங்கள்? இதோ உங்களுக்கான அருமையான வாய்ப்பு!