இன்று உலக அளவில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஒரு பிரபலமான செயலியாக ட்விட்டர் காணப்படுகிறது. இதில் உள்ளூர் தலைவர்கள் முதல் அனைத்து உயர் தர மக்களும் கணக்கு தொடங்கி இருக்கின்றனர்.
மேலும் இந்த ட்விட்டர் நிறுவனத்தை எலான் மாஸ்க் என்ற உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் வாங்கியிருக்கின்றார். இவர் சுமார் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை கடந்த வருடம் அக்டோபர் மாதத்தின்போது விலைக்கு வாங்கினதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து எலான் மாஸ்க் பல்வேறு விதமான மாற்றங்களை ட்விட்டரில் புகுத்தி வருகிறார். அதாவது அவர் ட்விட்டர் செயலியில் சோதனை அடிப்படையில் புதிய வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து அந்நிறுவனமானது ஆடியோ மற்றும் வீடியோ காலில் தொலைபேசி எண் இல்லாமலேயே ட்விட்டரில் பேசும் வசதியை அறிமுகப்படுத்துகிறது. இதன் காரணமாக பயனர்கள் அதிக உற்சாகத்துடன் காணப்பட்டுள்ளனர்.
மேலும் ட்விட்டர் நிறுவனத்தை மும்முரத்துடன் லாபகரமாக மாற்றுவதற்கான வேலைகளில் அந்நிறுவனம் ஈடுபட்டிருக்கின்றது. இதன் பின்னனியில் எலான் மாஸ்க் இந்நிறுவனத்தை விலைக்கு வாங்கப்பட்டதே முக்கிய காரணமாக இருக்கிறதென்று கருதப்படுகிறது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- மத்திய அரசு வேலையில் விருப்பமுள்ளவரா? உங்களுக்காகவே இந்த வாய்ப்பு வந்துள்ளது!
- இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்
- Latest Govt Jobs 2023 | Government Jobs 2023 | Government Job Vacancies
- Defence Job Alert 2023 – Free Job Alert Defence – Latest Government Jobs in India
- TN Govt Jobs 2023 | Get the Latest Tamilnadu Government Job Alert 2023