டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை!

Dr. Ambedkar Memorial Day President Murmu and PM Modi shower floral tributes

பாபா சாஹேப் அம்பேத்கர் என்று சொல்லப்படும் டாக்டர் அம்பேத்கர் 1891 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை சத்தாராவில் பயின்றார். அம்பேத்கர் தமது பட்டப்படிப்பை பம்பாய் எல்ஃபின்ஸ்டன் கல்லூரியில் பயின்றார். இவர் பட்டப்படிப்பை முடித்த பின்னர் மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்ல தேர்வு செய்யப்பட்டார். அதன்பின், இந்திய அரசியல் சட்ட வரைவில் அவரது பணிக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக ஒலிம்பிய பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

ALSO READ : மிகஜ்ம் புயல் பாதிப்பு : சென்னையில் இன்று ஆவின் பால் இலவசம்!

அதன்பின், அனைவராலும் அவர் டாக்கடர் அம்பேத்கர் என்று அன்போடு அழைக்கப்பட்டார். இந்நிலையில், சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் இன்று (டிசம்பர் 6) நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் அவரது சிலையின் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பிறகு, பிரதமர் மோடி அவர்களும் அம்பேத்கரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், மாநிலங்களவை சபாநாயகர் ஜக்தீப் தங்கர், எம்.பி.க்கள் உள்பட பலரும் அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top