வாகன ஓட்டிகளே உஷார்…! உயர்நீதிமன்றத்தின் புதிய நடவடிக்கை ! உடனே பாருங்க!

Drivers beware New action of the High Court Watch now-In Vehicles Removal Of Unwanted Number Plates

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கரூரை சேர்ந்த சந்திரசேகர் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், சட்ட விரோத நம்பர் பிளேட்டுகள் வாகனங்களில் ஓட்டப்பட்டிருந்து அதை அகற்றாவிட்டால் தாங்களே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் மிரட்டும் வகையில் இருக்கும் இதனை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர்.

மேலும், தமிழக வாகனங்களில் சாலை விதிகளை மீறிய நம்பர் பிளேட் வைத்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வாகனம் ஓட்டுனர்கள் தங்களது நம்பர் பிளேட்டில் அரசியல் தலைவர்களின் படங்களை ஓட்டுவது குறித்து போக்குவரத்து அலுவலர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இதையடுத்து, வாகனங்களில் விதிமீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விதியை மீறி பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here