சென்னையிலே 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை… சிவப்பு மண்டலமாக சில பகுதிகள்…!

Today News in Tamilnadu 2023

Today News in Tamilnadu 2023
சென்னையிலே 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை... சிவப்பு மண்டலமாக சில பகுதிகள்...! 2

தேசிய பாதுகாப்பு படை ஒத்திகையானது சென்னையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற இருக்கிறது. இந்த பயிற்சியில் பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கக் கூடிய காந்திவ்-5 என்னும் பாதுகாப்பு பயிற்சி நடைபெற உள்ளது. எனவே, சென்னையில் உள்ள பெரு நகர காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read>> உதயநிதி என்ற பெயரே சமஸ்கிருத பெயர்தானே… திடீரென பாயும் அர்ஜுன் சம்பத்…!

இதனால், நாளை (செப்டம்பர் 15 ) முதல் வருகின்ற செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வரை டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனங்கள் சென்னையிலே தற்போது பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.