விடிய விடிய கொட்டிய கனமழையால் சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்..! வாகன ஓட்டிகள் அவதி!!

Due to the heavy rain since yesterday the roads are flooded and the motorists are suffering

வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் “மிக்ஜம்” புயலாக மாறியுள்ளது. இந்த மிக்ஜம் புயலானது சென்னையில் இருந்து கிழக்கு-வடகிழக்கு பகுதியில் 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த புயலானது வடக்கு-வடமேற்கு திசையில் இன்று முற்பகல் அளவில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் நாளை முற்பகல் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

ALSO READ : மிக்ஜம் புயல் : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கொட்டப்போகும் மழை!

இந்நிலையில், மிக்ஜம் புயல் காரணமாக நேற்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் உள்ள கிண்டி, வேளச்சேரி, வேளச்சேரி, துரைப்பாக்கம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், நாவலூர், பரங்கிமலை, எழும்பூர், மாம்பலம், மடிப்பாக்கம், பெரம்பூர், அண்ணாநகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், அரும்பாக்கம், தாம்பரம், நுங்கம்பாக்கம்உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதலே சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இதனையடுத்து, நேற்று முதல் பெய்து வரும் கனமழை காரணமாக வேளச்சேரி ஏரி நிரம்பியதால் பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் சாலையில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த சாலையில் சுமார் 4 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் அந்த வழியே அனுப்பப்படாமல் வேறு வழியே திருப்பி விடப்பட்டுள்ளனர். சாலையில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் துரைப்பாக்கம் – பல்லாவரம் இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top