வைரஸ் பரவல் காரணமாக தமிழக பள்ளிகளுக்கும் விடுமுறை? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

Due to the spread of the virus Tamil Nadu schools are also on holiday Minister M. Subramani explanation

தமிழகத்தில் இன்புளூயன்சா H3N2 வைரஸ் காய்ச்சலானது பரவ தொடங்கியுள்ளதால் மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வகை வைரஸ் நோயை கண்டறிய சுமார் 476 நடமாடும் மருத்துவ வாகனங்களை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணி தெரிவித்தார்.

இந்நிலையில், இத்தகைய வைரஸ் காய்ச்சலானது புதுச்சேரியில் அதிக அளவில் காணப்படுவதால் புதுச்சேரி அரசு 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது. இதையடுத்து, இந்த வைரஸ் காய்ச்சலால் தமிழக பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுமா? என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், இன்புளூயன்சா H3N2 வைரஸ் காய்ச்சலால் தமிழகத்தில் அந்த அளவிற்கு பாதிப்பு இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் இந்த காய்ச்சலால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

RECENT POSTS IN JOBSTAMIL.IN