புயல் எதிரொலி : தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Due to the storm in Tamil Nadu warning cages are raised in 9 ports

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் உருவாகிய காற்றழுத்த தாழ்வு தற்பொழுது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுபெற்று வருகிற டிசம்பர் 2 ஆம் தேதி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்பொழுது டிசம்பர் 3 ஆம் தேதி புயலாக மாறும் என்று தெரிவித்துள்ளது.

ALSO READ : விஜய் சேதுபதி நடிக்கும் “ட்ரெயின்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

இந்த புயலுக்கு “மிக்ஜம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடல் பகுதியில் புயலாக நிலவக் கூடும் என்றும் அன்று மாலையே இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மிக்ஜம்” புயல் காரணமாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, காரைக்கால், புதுச்சேரி, தூத்துக்குடி, கடலூர், நாகை, பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டான 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top