இன்று வங்கக்கடலில் நிலநடுக்கம்..! சுனாமிக்கு வாய்ப்பு உள்ளதா? பீதியில் மக்கள்

Earthquake in the Bay of Bengal today Is there a chance of a tsunami People in panic-Huge Earthquake On Today

வங்கக்கடலில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 8.32 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 என்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்திலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பூரி (கிழக்கு) மற்றும் புவனேஸ்வர் (கிழக்கு-தென்-கிழக்கு) நகரங்களில் இருந்து 421 கிமீ மற்றும் 434 கிமீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தாகவும் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வந்தேச தலைநகரான டாக்கா உள்ளிட்ட பல நகரங்களில் இன்று காலை 9.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து வங்கதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள பதிவில், வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் உணரப்பட்ட இடங்கள் அனைத்தும் இந்தியாவிற்கு அருகில் உள்ளவை என்றும் கூறப்படுகிறது. வங்கக்கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கரையோரப்பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி வருமா? என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை கூறப்படவில்லை. ஆனால் இதற்கான அதிகார்வபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாததால் மக்கள் பயப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here