சென்னையில் இனி இந்த இடத்திற்கு ஈஸியா போகலாம்..! புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Easy to go to this place in Chennai Chief Minister M. K. Stalin opens the new flyover dont miss and read it

சென்னையில் உள்ள தியாகராய பகுதியானது மிகப்பெரும் வியாபார மையமாகக் காணப்படுகின்றது. இந்த வர்த்தகப் பகுதிகளில் ஏராளமான வர்த்தகர்களும் நுகர்வோர் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் வந்து செல்கின்றனர். இதனால் இப்பகுதிகளில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் ஆகாய நடை மேம்பாலம் அமைக்கும் பணியை திட்டமிடப்பட்டது.

அதன்படி ரூ.28 கோடியே 45 லட்சம் மதிப்பளவில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆகாய நடை மேம்பாலம் அமைக்கும் பணியானது ஆரம்பிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாது கொரோனா நேரங்களில் இப்பணியானது சற்று தாமதித்திருந்தன. ஆனாலும் கடந்த ஓராண்டின்போது இப்பணிகள் தொடர்ந்து துரிதமாக நடைபெற்றது. தற்போது இப்பணிகள் அனைத்தும் முடிவு பெற்றுள்ளன. இப்பாலத்தின் நீளம் 570 மீட்டர் ஆகும். மற்றும் அகலம் 4 மீட்டர் அளவிற்கும் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த பாலத்தில் கண்காணிப்பு கேமரா வசதி மற்றும் மின் விளக்குகள் ஆகியவைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்களை மாம்பலம் போலீஸ் நிலையத்தில் இருந்து கண்காணிக்கலாம். அதுமட்டுமல்லாது நகறும் படிக்கட்டுகளும் தியாகராய பஸ் நிலையத்தை ஒட்டியிருக்கும் இடங்களில் நிறுவப்பட்டிருக்கின்றது. மேலும் உஸ்மான் சாலை மற்றும் மாம்பாலம் இரயில் நிலையங்களில் தலா ஒரு மின்தூக்கிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த மேம்பலாத்தில் மற்றொரு சிறப்பம்சமாக சக்கர நாற்காலி வசதிகளானது எந்தவொறு சிரமும் இன்றி மாற்றுத் திறனாளிகள் செல்லும் வசதிக்கேற்ப ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த ஆகாய நடை மேம்பாலமானது ஆகாய மார்க்கமாக நடந்து செல்கின்ற வகையில் மாம்பலம் ரயில் நிலையம் முதல் தியாகராய நகர் மேட்லி சாலை சந்திப்பு வரை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது மேலும் தியாகராய நகர் வரும் பொதுமக்களுக்கும் ரயில் பயணிகளுக்கும் அவர்களுடைய வசதிக்கேற்ப மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இதனால் கூட்ட நெரிசலானது இனி முற்றிலும் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த ஆகாய நடை மேம்பாலம் நிறுவும் பணி முடிவு பெற்றுள்ளதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனை இன்று திறந்து வைக்க உள்ளார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN