ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் எட்டாவது (8th) படித்தவர்களுக்கு வேலை! மாசம் பொறந்தா 15,700 முதல் 62,000 வரை சம்பளம்!

eighth candidates can apply for rural development and panchayat department job

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகிறது. இப்பணிக்கென இரண்டு காலியிடங்கள் உள்ளன. ஒவ்வொரு மாசமும் 15,700 முதல் 62,000 வரை தமிழ்நாடு அரசு சம்பளம் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Offline முறையில் Commissioner, Koradacheri Panchayat Office, Koradacheri, Thiruvarur-613703 என்ற முகவரிக்கு தங்களுடைய விவரங்களை அனுப்ப வேண்டும்.

எட்டாவது படித்தவர்கள் இந்த தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். மேலும், 18 வயது முதல் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக பணம் ஏதும் செலுத்த தேவையில்லை. தேர்வு செய்யப்படும் நபர்கள் திருவாரூர் மாவட்டத்தில் பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.

ALSO READ : என்னாது 6,50,000 சம்பளமா? IDBI வங்கியில் 2100 பணியிடங்களுடன் வேலை அறிவிப்பு!

முக்கிய நிபந்தனைகள்:

  • விண்ணப்பதாரர் திருவாரூர் மாவடத்தில் இருப்பவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் கல்விச் சான்று, வகுப்புச் சான்று முன்னுரிமை சான்று நகல்கள் சுய கையொப்பமிட்டு இணைத்திருக்க வேண்டும்.
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்று நகல்களுடன் நேரடியாக அல்லது பதிவஞ்சல் மூலமாக 11-12-2023 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
  • தகுதியான விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் இடம் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படும்.
  • கால தாமதமாக வரும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது. மேலும் தகுதியில்லாத விண்ணபங்களை நிராகரிக்க கூடிய உரிமை ஊராட்சி ஒன்றிய நியமனக் குழுவிற்கு உண்டு.

இன்னும் முழுமையான விவரங்களை அறிய Official Notification & Application Form-ஐ பார்த்து அறிந்து கொண்டு, நீங்கள் தகுதியுடையவராக இருந்தால் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள தேதிக்குள் விண்ணப்பிக்க விரையுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top