ஊழியர்களுக்கு அடிக்க போகும் ஜார்பாட்..! மீண்டும் சம்பள உயர்வு?

Employees are going to hit the jackpot Another pay rise dont miss and read it now

கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய அரசானது அகவிலைப்படியை 4% ஆக உயர்த்தி தனது ஊழியர்களுக்கு வழங்கினது. இது அம்மாதத்திற்குறிய அகவிலைப்படி உயர்வாகும். இதற்கான அறிவிப்பானது மார்ச் மாதம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஏப்ரல் மாத ஊதியத்துடன் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குரிய நிலுவைத்தொகை அகவிலைப்படியை ஜனவரி 1 என்ற முன் தேதியிட்டு அளிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. அதனையடுத்து மொத்தமாக 42% அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ஊழியர்கள் தற்போது பெற்று வருகின்றனர்.

மேலும் அடுத்த ஆறு மாதங்களுக்குரிய DA தொகையானது ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை இருக்கும் என்று ஏஐசிபிஐ தரவுகளை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றது. அதைத் தொடர்ந்து AICPI ஆனது 132.8 என ஜனவரியிலும், அதிலிலிருந்து 0.1 என குறைந்து AICPI 132.7 என்று பிப்ரவரியிலும் காணப்பட்டது. இருந்தாலும் நிபுணர்கள் தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையில் AICPI ஆனது மார்ச் மாதத்தின்போது உயர்ந்திருக்கும் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்திலிருந்து அகவிலைப்படியானது உயர்த்தி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுத் தொடர்பாக வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் 3% அல்லது 4% வரை 2023 ஜூலை அகவிலைப்படியானது அதிகரித்து 45% அல்லது 46% வரை மொத்தமாக அளிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN