ESIC தமிழ்நாடு கழகத்தில் வேலை பார்க்க ஆசையா? மாதம் ரூ.1,43,864/- சம்பளம் தராங்கலாம்!

பணியாளர் மாநில காப்பீட்டுக் கழகத்தில் மூத்த குடியிருப்பாளர் வேலை
பணியாளர் மாநில காப்பீட்டுக் கழகத்தில் மூத்த குடியிருப்பாளர் வேலை

மாதம்தோறும் அரசாங்க சம்பளம் வாங்க ஆசையா? அப்போ இந்த வேலை உங்களுக்கு தான். (ESIC TN – Employee’s State Insurance Corporation Tamil Nadu) தமிழ்நாடு பணியாளர் மாநில காப்பீட்டுக் கழகத்தில் நேரடி நேர்காணல் முறையில் வேலை அறிவிப்பு. இந்த வேலையில் தேர்ச்சிப்பெற்றவர்கள் சென்னையில் வேலை பார்க்கலாம்.

ALSO READ : ITI, Diploma முடித்தவர்களுக்கு ஒரு குட் நியூஸ்! மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளத்தில் ரயில்வேயில் வேலை வந்துருக்கு!

வேலை பெயர் : மூத்த குடியிருப்பாளர் (Senior Resident) பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன.

காலியிடங்கள் : 29 பணியிடங்களை தமிழ்நாடு பணியாளர் மாநில காப்பீட்டுக் கழகம் நிரப்பவுள்ளளன.

சம்பளம் : மாதத்திற்கு ரூ.67,700 முதல் ரூ.1,43,864 வரை சம்பளம் தராங்கலாம்.

கல்வித்தகுதி : ESIC தமிழ்நாடு அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Post Graduation Degree, MD, MS, DNB முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : பணியாளர்கள் மாநில காப்பீட்டு கழக தமிழ்நாடு ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-07-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் வயது அதிகபட்ச 45 ஆக இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் : SC/ST/PWD/பெண்கள் & முன்னாள் படைவீரர்கள் வேட்பாளர்கள் ஆகியோர் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை, மற்ற அனைத்து வேட்பாளர்களும் ரூ.500/- செலுத்த வேண்டும்.

நேர்காணல் முகவரி : Office of Dean, ESIC Medical College & Hospital, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai.

தேதி விவரங்கள் :

அறிவிப்பு தேதி: 02 டிசம்பர் 2023
வாக்-இன் நேர்காணலின் தேதி: 12, 13 டிசம்பர் 2023

Employee’s State Insurance Corporation Tamil Nadu கழகத்தில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பை பற்றி மேலும் தெரிந்து கொள்ள Official Notification -யை பயன்படுத்துங்க. இந்த பணிக்கான விண்ணப்ப படிவத்திற்கு Application Form pdf -யை பயன்படுத்துங்க.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top