எக்ஸாம் எழுத்த வேண்டாம்! நேரடி நேர்காணல் முறையில் தமிழ்நாடு ESIC கழகத்தில் வேலை வந்துருக்கு!

தமிழ்நாடு பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் மூத்த குடியிருப்பாளர் வேலை
தமிழ்நாடு பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் மூத்த குடியிருப்பாளர் வேலை

ESIC Tamil Nadu -Employees State Insurance Corporation Tamil Nadu தமிழ்நாடு பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் மாதம் ரூ.67,700 சம்பளத்தில் வேலை வந்தாச்சி. காலியாக உள்ள 20 மூத்த குடியிருப்பாளர் (Senior Resident) பணியிடங்களை நிரப்ப உத்தரவு வெளியீடு. சென்னையிலேயே வேலை பார்க்க இது ஒரு நல்ல வாய்ப்பு. எக்ஸாம் இல்லாமல் நேரடி நேர்காணல் முறையில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.

ALSO READ : ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட்டில் ஒரு சூப்பர் வேலை! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா?

கல்வித்தகுதி விவரம் : ESIC தமிழ்நாடு அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் MD/ MS/ DNB முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரம் : விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் விவரம் : SC/ST, PWD, பெண்கள், முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கட்ட தேவையில்லை, பொது விண்ணப்பதாரர்கள் ரூ.500/- செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேரடி நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல் முகவரி : ESIC Medical College and Hospital, KK Nagar, Chennai-600078.

அறிவிப்பு வெளியான நாள் : 18 டிசம்பர் 2023

நேர்காணல் நடைபெறும் நாள் : 28 டிசம்பர் 2023

மேலும் இந்த வேலைக்கு தேவையான விரிவான தகவல்களுக்கு Official Notification -யை டவுன்லோட் செய்து அறிந்து கொள்ளுங்கள். Application Form pdf மூலம் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top