இந்திய வரலாற்று கார்கள் சங்கம் சார்பில் தேசிய அளவிலான பாரம்பரிய கார்கள் கண்காட்சி சென்னை கொட்டிவாகம், பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள தனியார் ஓட்டல் வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் 1926 முதல் 1980 வரையிலான போர்டு, பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ், ஜாக்குவார் உள்ளிட்ட பல்வேறு வகையான 68 பாரம்பரிய கார்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து இடம் பெற்று இருந்தன.
பாரம்பரிய கார்கள் கண்காட்சியை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார். மேலும், இவருடன் சென்னை போக்குவரத்து போலீஸ் சுதாகர் வருகை தந்திருந்தார். அதன்பிறகு, இந்த கண்காட்சியை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணனும் பார்வையிட்டார். அவர் பல்வேறு பாரம்பரிய கார்களுக்கு முன் நின்று செல்பி எடுத்துக்கொண்டார்.
Also Read : 100 ரூபாய் நாணயம் இன்று வெளியீடு..! இதுல இவ்வளவு சிறப்பம்சம் இருக்கா? உடனே பாருங்க…
மேலும், இதில் கார்கள் மட்டுமில்லாமல் ராயல் என்பீல்டு, எஸ்.டி. ஜாவா உள்ளிட்ட மிகவும் பழமையான 12 மோட்டார் சைக்கிள்களும் இடம் பெற்றிருந்தன. இதனை கண்டு மக்கள் அனைவரும் அவர்களின் குழந்தைகளிடம் கார்களை காட்டி மகிழ்ந்தனர். இந்த கார் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை இந்திய வரலாற்று கார்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் பிரதாப், செயலாளர் வி.எஸ்.கைலாஷ், துணைத் தலைவர் ராஜேஷ் அம்பாள் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.