Title of the document    உங்கள் ஊரின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள டவுன்லோட் செய்யுங்கள் Click Here

TNPSC தேர்வு எழுதப் போறீங்களா?

Recent News

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. தற்போது 92 பணியிடங்களுக்கான (துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சித்துறை), டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான முதல்நிலை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இப்பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இன்று (22.08.2022) கடைசி நாள் என்றும்… இதற்கு பின்பாக இச்சேவை முற்றிலுமாக நிறுத்தப்படும் என்றும் TNPSC அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் தவறுகளை திருத்தம் செய்து கொள்ளலாம் எனவும் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெறும் எனவும் TNPSC அறிவித்துள்ளது.

தேர்வு எழுதப்போகும் விண்ணப்பத்தாரர்கள் உடனே விண்ணப்பிக்க விரையுங்கள்.


RECENT POSTS:

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
error: Content is protected !!