பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணபிக்க மேலும் கால அவகாசம் நீட்டிப்பு..! தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Today News extension of time to apply for graduate teacher posts because due to rain

தமிழகத்தில் ஆண்டுதோறும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை ஆசிரியம் தேர்வு வாரியம் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய பயிற்றுனர் ஆகியவற்றில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியும் அறிவித்தது.

ALSO READ : மிக்ஜம் புயல் எதிரொலி : சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்வு!

அதன்படி, பட்டதாரி ஆசிரியர் மற்றும் வளமைய பயிற்றுனர் காலப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று(டிசம்பர் 7) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மிக்ஜம் புயல் காரணமாக பல்வேறு பகுதிகள் மழையினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணபிக்க வேலும் காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், பட்டதாரி ஆசிரியர் மற்றும் வளமைய பயிற்றுனர் காலப்பணியிடங்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க வருகிற 13 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணபங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top