குடியரசு தினவிழா ஒத்திகையில் கண்களை கவரும் அலங்கார ஊர்திகள்..!

Eye-catching decorative vehicles at the Republic Day rehearsal-In Republic Day Tamil Nadu Govt Vehicle Decorative

நாட்டின் 74வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கவுள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின கொண்டாட்டத்தின் போது குறிப்பிட்ட கருப்பொருளை மையமாக கொண்டு மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் துறைகள் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். அதில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ஊர்திகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும்.

இந்த ஆண்டு பெண்களை மையப்படுத்தி அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குடியரசு தினம் நெருங்கி வருவதையொட்டி அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்று வருகிறது. குடியரசு தின நிகழ்ச்சிகான முழு ஒத்திகை இன்று நடைபெறுகிறது. அதில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி இடம்பெற்றிருந்தது.

RECENT POSTS IN JOBATAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here