நடுரோட்டில் வெண்டைக்காயை கொட்டி சென்ற விவசாயிகள்! வைரல் வீடியோ!

Farmers who dumped onion in the middle of the road Viral video-In The Middle Of The Road Not Getting Proper Price For Beans

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானூர் கிராமத்தில் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்தில் வெண்டைக்காயை பயிரிட்டு வந்தனர். இந்நிலையில், வெண்டைக்காய்கள் நல்ல விளைச்சலை கிடைத்த நிலையில் தற்போது விவசாயிகள் அறுவடை செய்தனர்.

இதையடுத்து, அறுவடை செய்யப்பட வெண்டைக்காயை வழக்கம்போல் காய்கறி சந்தையில் விற்பனை செய்வதற்காக எடுத்து சென்றனர். ஆனால் இந்த வெண்டைக்காய்களின் விலை போதிய அளவை விட மிக குறைந்த விலைக்கே விற்கப்பட்டது. அறுவடை செய்த அளவிற்கு கூட இந்த வெண்டைக்காய் விலை போகாததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் விற்பனைக்காக எடுத்து சென்ற வெண்டைக்காயை அப்படியே கொட்டி சென்றனர்.

மேலும், இந்த விவசாயிகள் இந்த காய்கறி பயிர்களுக்கும் அரசு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த காய்கறிகளை விவசாயிகள் சாலைகளில் கொட்டி செல்லும் காட்சி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here