நடிகர் கமல்ஹாசனின் 234-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! மகிழ்ச்சியில் ரசிகர்கள்! #KH234

First look poster of Kamal Haasan 234th film released! KH234 today cinema news
KH234

விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்த கமல் ஹாசன் தரமான வெற்றியை அதில் பதிவு செய்தார். அந்த படத்தின் வெற்றியை அடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். அதன்படி அடுத்ததாக அவரது நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் இந்தியன் 2-வும், மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படமும் வெளியாக உள்ளது.

37 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைய உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும் அந்த படத்தை ராஜ்கமல் நிறுவனம் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. அதோடு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் சண்டை பயிற்சியாளர்களாய் அன்பறிவ் மாஸ்டர்ஸ் பணியாற்றுகின்றனர். எனவே ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ : சந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மேலும் இந்த படத்தில் த்ரிஷாவும், நயன்தாராவும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக #KH234 என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ‘#KH234’ படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

அதில் கமல் ஹாசன் முகம் முழுக்க மூடியிருக்க அவரது கண்கள் மட்டும் தெரிகின்றன. மேலும் பின்னணியில் குண்டு வெடித்து எழும் புகை போன்றும் இடம்பெற்றிருக்கிறது. இதனால் இந்தப் படம் பக்கா ஆக்‌ஷன் ஜானரில் வரவிருக்கிறதோ என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்து தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கமல் – மணிரத்னம் இணையும் படத்தின் பெயர் இன்று மாலை 5 மணிக்கு வீடியோ உடன் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்