ஓட்ரடுனர் இன்றி இயங்கும் முதல் மெட்ரோ ரயில்…! எங்கே? எப்போது?

0
First metro train to run without Odratuner Where When-Frist Driverless Metro Train

வளர்ந்து வரும் தற்பொழுது உள்ள கால கட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சி நம்ப முடியாத அளவிற்குதான் இருக்கிறது. அந்த வகையில் உலகின் மிக அதிவேகமாக இயக்கப்படும் ரயில் சேவைகளில் மெட்ரோ ரயில் சேவை தான் முன்னனியில் இருக்கிறது.

இந்நிலையில், விஞ்ஞான வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் செல்கிறது. அதேபோல் தற்பொழுது ஓட்டுனர் இல்லாமல் மெட்டரோ ரயிலை தாயரிக்க போவதாக மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் தெரிவித்தார். ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலை தயாரிப்பதற்காக 946 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஓட்டுனர் இல்லாத இந்த மெட்ரோ ரயில் 3 பெட்டிகளை கொண்டு மொத்தம் 26 மெட்ரோ ரயில்களை உருவாக்க உள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக் முன்னிலையில் , சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் திருவாளர் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ராஜீவ் ஜோய்சர் ஆகியோர் தெரிவித்த நிலையில் அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டனர். ஆளில்லா முதல் மெட்ரோ ரயில் 2024 – ஆம் ஆண்டில் ரயில் இயக்கத்திற்கான சோதனைகள் நடத்தப்பட்டபின் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here