Today Weather News in Tamilnadu
நேற்று இரவு சென்னையில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கிண்டி, மீனம்பாக்கம் போன்ற பகுதிகளின் சாலைகளில் தண்ணிர் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினார்கள். இதுமட்டுமின்றி, அவ்வழியே செல்ல கூடிய அனைத்து வாகன ஓட்டுனர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன. 6 சர்வதேச விமானங்கள் உட்பட 16 விமான சேவைகள், சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டன. இதனால், அங்கிருந்த பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். அதுமட்டுமின்றி, 64 பயணிகளுடன் விஜயவாடாவில் இருந்து வந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் திருச்சி விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது.