வெளுத்து வாங்கும் மழையால் ஏரிகளில் தண்ணீர் திறப்பு-கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை..!

0
Flooding in lakes due to whiteout rain - Warning to coastal villages-Puzhal Lake Water Released

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் பல இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதன் காரணமாக ஏரிகள் அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளது. குறிப்பாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக முக்கியமானது புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும்.

இந்த சூழ்நிலையில், தற்பொழுது பெய்து வரும் கனமழையால் புழல் ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தற்பொழுது உள்ள நிலவரப்படி, ஏரியின் நீர் இருப்பு 2,738 மில்லியன் கன அடியாக உள்ளது. நீரின் வரத்து அதிகரிப்பதால் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று ஏரியில் இருந்து 2 மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

புழல் ஏரியிலிருந்து நீரின் வரத்து அதிகரிப்பின் காரணமாக மதகுகள் திறக்கும்பொழுது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்க்கீஸ் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். ஏரியில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படுவதால் கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வருவாய்த்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here