தொடர்ந்து இரண்டாவது நாளாக சென்னை டி.பி.ஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்..!

For the second day in a row, intermediate teachers are on hunger strike at TBI campus in Chennai-Chennai TPI Secondary Teachers On campus Fast For 2nd Day

சென்னையில் ஊதியம் முரண்பாடுகளை நீக்கக்கோரி அரசுபள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரே பணிக்கு ஒரே ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 2012-ஆம் ஆண்டுக்கும் முன்பும் பின்பும் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஊதிய விகிதத்தில் முரண்பாடு இருப்பதாகவும், அதனை உடனடியாக களைய வலியுறுத்தியும் சென்னை டிபிஐ வளாகத்தை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் போராடிய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ராஜரத்தின ஸ்டேடியத்தில் கொண்டு போய் வைக்கப்பட்டனர். ஆனால் ஆசிரியர்கள் அங்கும் தங்களது கொள்கைகளை வலியுறுத்தி காலை 6 மணி முதல் உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர். விடிய விடிய ஆசிரியர்கள் நடத்திய வரும் இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நேரம் செல்ல செல்ல ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அங்கு அதிகரித்து வருகிறது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே 2 நாட்களாக ஆசிரியர்கள் பட்டினி போராட்டம் காரணமாக, ஒருவருவராக மயங்கி விழுந்து வருகின்றனர்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here