மேட்டூர் அணைக்கு வரும் வெளிநாட்டு பறவைகளா? அதிர்ச்சி தகவல்..

Foreign birds coming to Mettur Dam Shocking information-Foreign Birds In Mettur Dam

மேட்டூர் அணை கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையால் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் அணையிலிருந்து வெளிவரும் நீரின் அளவும் அதிகரித்தது. இதனை காண பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்தம் வண்ணம் இருந்தன.

இந்நிலையில், தற்பொழுது அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளதால் அணையிலிருந்து வெளியேறும் நீரின் அளவும் குறைந்துள்ளது. நேற்று நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் மட்டம் 103.85 கன அடியாக குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதையடுத்து அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் நீர்த்தேக்கப்பகுதிகளில் தண்ணீர் வற்றி வருவதால் கரையோரங்களில் சேறும்-சகதியுமாக காட்சி அளிக்கிறது. அந்த பகுதியில், புழு, பூச்சிகள் அதிக அளவில் காணப்படுவதால் அதை சாப்பிட நாரைகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு பறவைகளும் வருகை தருகின்றனர். நீர்த்தேக்க பகுதிகளான கொளத்தூர் அருகே உள்ள பண்ணவாடி பரிசல் துறை, மூலக்காடு ஆகிய இடங்களில் வெளிநாட்டு பறவைகள் காணப்படுகின்றன. இந்த அரிய வகை வெளிநாட்டு பறவைகள் எந்த நாடுகளில் இருந்து வந்தன என்பது தெரியவில்லை.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here