இந்திய பங்கு சந்தையில் குவியும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..! ஏன்?

Foreign investors flock to the Indian stock market Why-Foreign Investors In Indian Stock Markets

இந்தியாவில் வார தொடக்க நாள் மற்றும் மாத தொடக்க நாளில் பங்கு சந்தையில் புதிதாக வர்த்தகம் தொடங்கப்படும். இந்நிலையில், இந்த மாதத்தின் தொடக்க நாளன இன்று தேசிய பங்கு சந்தைகள் புதிய உச்சம் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்திய பங்கு சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் முதலீடு செய்வது வழக்கம். இன்றைய நிலவரப்படி, மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 483.42 புள்ளிகள் உயர்ந்து 63,583.07 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 129.25 புள்ளிகள் உயர்ந்து 18,887.60 புள்ளிகளாக உள்ளது.

இந்நிலையில், இந்திய பங்கு சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முந்தைய மாதம் அதாவது நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் ரூ.36,239 கோடி முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தற்பொழுது இந்தியா பொருளாதார நாடுகளில் முன்னணியில் இருப்பதால் சர்வதேச முதலீட்டாளர்கள் அதிக அளவில் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here