சேப்பாக்கம் கிரிக்கெட் மைதான அரங்கிற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர்! காரணம் இதுதான்..!

Former Chief Minister Karunanidhis name for Chepakkam Cricket Stadium Stadium This is the reason

கடந்த 1916 ஆம் ஆண்டு சேப்பாக்கத்தில் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டத்து. அதன்பின், 1925 ஆம் ஆண்டு முதல் அந்த மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை இந்த சேப்பாக்கம் மைதானத்தில் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில்’, கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த சேப்பாக்கம் மைதானத்தை மேலும் விரிவுபடுத்தும் பணி தொடங்கியது. அதில் 5000 கூடுதல் இருக்கைகள் உள்ள புதிய கேலரி கட்டப்பட்டது. இந்த புதிய பார்வையாளர் அரங்கத்திற்கு கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, . புதுப்பிக்கப்பட்ட மைதானத்தையும், அதில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி அரங்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 17) திறந்து வைத்தார். இதுகுறித்து கிரிக்கெட் சங்க தலைவர் சிகாமணி கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் கிரிக்கெட் மீது வைத்திருந்த ஆர்வமும், ஆரம்ப காலகட்டத்தில் சேப்பாக்கம் மைதானம் கட்டும் போது சுமார் 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்த அவரின் பங்களிப்பை கௌரவிக்கவே புதிய ஸ்டேண்டுக்கு அவரது பெயர் வைக்க திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக கடுமையான பணிச்சுமைக்கு மத்தியிலும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் சர்வதேச போட்டிகளை நேரில் கண்டு ரசித்து தோனி உள்ளிட்ட வீரர்களிடம் போட்டோ எடுத்தும் மகிழ்ந்துள்ளார்.

RECENT POSTS IN JOBSTAMIL.IN