இலவசம்! இலவசம்! இலவசம்! நீங்க தொழில் தொடங்கணுமா? உங்களுத்தான் இந்த இலவச பயிற்சி!

செப்டம்பர் 12-ஆம் தேதி பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட செங்குணம் – கைகாட்டி எதிரில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் சார்பில் முயல் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதில் மாணவர்களுக்கு, முயல் இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

நீங்க தொழில் தொடங்கணுமா உங்களுத்தான் இந்த இலவச பயிற்சி!
நீங்க தொழில் தொடங்கணுமா உங்களுத்தான் இந்த இலவச பயிற்சி!

இந்த இலவச பயிற்சி முகாமில் கலந்துகொள்ள ஆர்வமுள்ளோர் ஆராய்ச்சி மையத்திற்கு, அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணிக்கு மேல் நேரடியாகவோ அல்லது 938507022 என்ற தொலைபேசி எண்ணின் மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் சுரேஷ் குமார் அவர்கள், இலவச பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வரும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.