கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி!

Latest News

வள்ளியூர், ஜூன் 15:

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்போர் ராதாபுரத்தில் வெள்ளிக்கிழமை விண்ணப்பம் அளிக்கலாம் என தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கூடங்குளம் அணுமின் திட்டத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென 1999-ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியின்போது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அணுமின் நிலையத்தில் சி – டி பிரிவு பணியிடங்களில், அணுமின் நிலையத்துக்காக நிலம் கொடுத்தவர்களின் வாரிசுதாரர்கள், இப்பகுதி இளைஞர்களுக்கு 2011-ஆம் ஆண்டு வரை பணிகள் வழங்கப்பட்டன. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக அணுமின் நிலையத்தில் உள்ளூர் இளைஞர் ஒருவருக்குக்கூட வேலை வழங்கவில்லை. தற்போது, அணு உலை வளாகத்தில் 99 சதவீதம் வடமாநிலத்தவர்களே வேலை செய்கின்றனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, நான் (மு.அப்பாவு), தற்போதைய ஆட்சியர், அணுமின் நிலைய வளாக இயக்குநர் மேற்கொண்ட வாய்மொழி ஒப்பந்தத்தின்படி, அணுஉலைக்கு நிலம் கொடுத்தவர்கள், அவரது வாரிசுதாரர்கள், உள்ளூர், சுற்றுவட்டார கிராமங்கள், ராதாபுரம் தொகுதிக்குள்பட்ட கிராம ஊராட்சிகள், திசையன்விளை, பணகுடி, வள்ளியூர் பேரூராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஐ.டி.ஐ., டிப்ளமோ தேர்ச்சி பெற்ற இளைஞர்கள், இளம் பெண்களுக்கு அணுமின்நிலைய வளாகத்திலேயே வேலைவாப்புக்கான பயிற்சி வழங்கி, அதில் தகுதியுடையவர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனவே, மேற்கூறிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் தங்களது கல்விச் சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் இலவச வேலைவாய்ப்பு பயிற்சிக்கான விண்ணப்பங்களை, ராதாபுரம், வடக்கன்குளம் சாலையிலுள்ள அமுதா ஸ்ரீ மஹாலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) காலை 10 மணியளவில் என்னிடம் வழங்கலாம் எனக் கூறியுள்ளார்.

SOURCE LINK


பொறுப்பு துறப்பு:

மேலே கொடுப்பட்டுள்ள தகவல்கள் அல்லது செய்திகள் எங்களுடைய ஜாப்ஸ் தமிழ் குழுவினரால், அதன் உண்மை தன்மையை நன்கு ஆராயப்பட்டு பதிவிடப்படுகிறது. வெளியிடப்படும் படைப்புகள் அனைத்தும் வாசகர்களின் புரிதல், பயன்பாட்டிற்காக மட்டுமே. மற்றவர்களுடைய அறிவுசார் குறியீட்டுகளை மீறும் (Copyright Violation) நோக்கம் இல்லை. எனவே, நாங்கள் எந்த விதமான காப்புரிமையும் கோரவில்லை. தகவல் அனைத்தும் Fair Use Policy அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு அதன் மூல இணைப்பை (Source Link) கொடுத்துள்ளோம். இருப்பினும், உங்களுக்கு ஜாப்ஸ் தமிழ் இணையதளத்தின் செய்திகள், கட்டுரைகள், வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் படங்களின் மீது ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் [email protected] என்ற முகவரிக்கு இமெயில் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button