அலங்கார மீன் வளர்ப்புக்கு இலவசமாக பயிற்சி தரங்களா? எங்கே? எப்போ?

Free training classes for ornamental fish farming Where when-Free Training For Colorful Fish

மீன்களை வளர்க்க யாருக்குதான் பிடிக்காது. அதுவும் நல்ல அழகழகான கலர்கலராக மீன்களை வளர்க்க யாருக்குதான் பிடிக்காது. அந்த வகையில், ஒரு நாள் இலவச அலங்கார மீன் பயிற்சியினை மேற்கொள்ளப்போவதாக மீன் வளர்ப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஒரு நாள் இலவச அலங்கார மீன் பயிற்சியினை, புதிய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையம், புழுதேரி, கரூர் மற்றும் மீன் வள பல்கலை கழக திருச்சி நிலையான மீன்வளர்ப்பு மையம் ஆகியவை இணைந்து நடத்துகின்றனர். இந்த ஒரு நாள் இலவச பயிற்சியானது திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், குழுமணி மெயின் ரோடு அலங்கலம், ஜீயபுரத்தில் உள்ள மீன் வள பல்கலை கழக ஆராய்ச்சி மையத்தில் இன்று (3.11.2022) வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

மீன் வள பல்கலை கழக ஆராய்ச்சி மையத்தில் இந்த ஒரு நாள் இலவச பயிற்சியை ஆர்வமுள்ள மக்கள், அலங்கார மீன்குஞ்சு உற்பத்தி செய்வோர், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள விவசாயிகள் போன்றோர் கலந்துகொண்டு பயன்பெறலாம். இந்த பயிற்சியில், குட்டியிடும் மீன்கள் மற்றும் முட்டையிடும் மீன்களின் இனப்பெருக்கம் பற்றிய பாடங்கள், செயல்முறை கூடிய தொழில்நுட்பங்கள், மீன்வளர்ப்புக்கான உபகரணங்கள், மீன்களுக்கான உணவுகள், உணவு தயாரிப்பு முறைகள், நோய்கள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் போன்றவை விரிவாக விளக்கபப்டும்.

இதனை பற்றி முழு விபரங்களை பெற தொலைபேசி எண் 6381150356 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வேண்டிய விபரங்களை பெற்றுகொள்ளலாம்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here