நண்பர்களே… இனி சிரமப்பட தேவையில்லை..! வாட்ஸ் அப்லேயே டிக்கெட் வாங்கலாம்! சீக்கிரம் படிங்க உங்களுக்கும் யூஸ் ஆகும்!!

Friends No need to worry anymore Buy tickets on WhatsApp Read it soon it will be useful for you too full details here read it

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுவதை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் சேவை திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம், போக்குவரத்து நெரிசலின்றி மக்கள் பயணம் செய்யும் சூழல் உருவானது. முதற்கட்டமாக 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு புதிய திட்டங்களை சிஎம்ஆர்எல் செயல்படுத்தி வருகிறது. அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட சிங்கார சென்னை அடையாள அட்டை சென்னைவாசிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், டிக்கெட் எடுப்பதற்கான வழியை மேலும் சுலபமாக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் தங்களது whatsapp மூலம் டிக்கெட்டுகளை எடுக்கும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. இனிமேல், சென்னை மெட்ரோ ரயில் பயணிகள் டிக்கெட் எடுக்க கவுன்ட்டர்களுக்கு செல்ல வேண்டாம். தங்களது செல்போன் மூலமே டிக்கெட் எடுத்துக் கொள்ளும் வசதி மெட்ரோ பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN